

திண்டுக்கல் மாவட்டம் மைக்கேல்பாளையத்தைச் சேர்ந்தவர் மார்சலின் (39). இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் இறைச்சிக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இறைச்சி வாங்க வந்த சிறுமிக்கு, பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டத்தில் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து, மார்சலினை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.