

மகளை ஊருணி கரையில் உட்கார வைத்துவிட்டு குளிக்கச் சென்ற ஜோதிமணி நீரில் மூழ்கிவிட்டார். நீண்ட நேரமாகியும் தந்தை வெளியே வராததைப் பார்த்த சிறுமி, அவரை தேடுவதற்காக ஊருணியில் இறங்கிவிட்டார். இதில் சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அப்பகுதியினர் தந்தை, மகளின் உடலை மீட்டனர். எஸ்.பி. பட்டினம் போலீஸார் விசாரணை நடத்தினர். குழந்தை யாஷினியின் பிறந்த தினமான நேற்று அவரும், அவரது தந்தையும் உயிரிழந்தது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.