கோடை மழை தொடங்கியுள்ளதால் - உழவு பணிகளை தொடங்கலாம் : வேளாண் இணை இயக்குநர் அறிவுறுத்தல்

கோடை மழை தொடங்கியுள்ளதால் -  உழவு பணிகளை தொடங்கலாம் :  வேளாண் இணை இயக்குநர் அறிவுறுத்தல்
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்யதொடங்கியுள்ளதால் உழவுப்பணி களை விவசாயிகள் தொடங்க லாம் என வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கோடை காலங்களில் சாகுபடி நிலத்தை தரிசாக விடாமல் கோடை உழவை செய்வதால் மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு மண் இலகுவாகும்.

இதனால், மண்ணில் காற் றோட்டம் அதிகரிக்கும். மண்ணில் நீர்பிடிப்புத்தன்மை அதிகரிப் பதோடு மழைநீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறங்கி மழை நீரை சேமிக்க கோடை உழவு மிகவும் பயன் அளிக்கும்.

கோடை உழவு செய்வதால் பயிரின் வேர் நன்கு ஆழமாக செல்ல வழியுண்டு. அதேபோல, மண்ணில் உள்ள நோய் கிருமிகளும் பூச்சிகளின் முட்டை கள் கூட்டுப்புழுக்களும் நிலத்தில் உள்ள கிளைச்செடிகளின் விதைகளும் வெளியே தள்ளப்பட்டு வெயிலின் வெம்மையால் அழிக்கப்பட்டு வரும் பருவத்தில் பூச்சி, நோய் தாக்குதலை குறைக்க உதவுகிறது.

கோடை உழவு உழும்போது பயிரின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மண்ணில் இருந்து பயிருக்கு எளிதில் கிடைக்க உதவுகிறது. மேலும், மண் அரிமானத்தை கட்டுப்படுத்தி மண்ணில் உள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் விரையமாவதை தடுக்க முடிகிறது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பரவலாக பெய்ய தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கோடை உழவை செய்து பயன்பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in