

திருப்பூர் மாநகராட்சி 16, 17 -வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கவலியுறுத்தி, ஐந்து நாட்களுக்குஒருமுறை குடிநீர் விநியோகம்செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி2-வது மண்டல அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாண்டியன் நகர் கிளைச் செயலாளர் ஜி.செல்வராஜ் தலைமையில் சென்றுபொதுமக்கள் அளித்த மனுவில், "16, 17-வது வார்டுகளுக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பிரதான வீதி, ஜெயலட்சுமி நகர், நல்லப்பா நகர், டீச்சர்ஸ் காலனி, கருப்பராயன் கோயில் வடக்கு வீதி, ஆர்எஸ்புரம் பகுதி, சவுண்டம்மன் கோயில் பகுதி ஆகிய இடங்களில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. கோடை காலத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.