

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2,111 மது பாட்டில் களை போலீஸார் பறிமுதல் செய் தனர்.
ராமநாதபுரம் தீவிர குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் பாம்பன் விவேகானந்தர் நகரில் உள்ள ரவிச்சந்திரன் என்பவரது வீட்டைச் சோதனையிட்டனர். அங்கு சட்டவிரோதமாக விற்பனை செய்ய 40 அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 2,111 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர் ரவிச்சந்திரன், அவரது அண்ணன் மலைச்சாமி, ரீகன் மற்றும் மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்ற பாம்பன் மதுபானக்கடை மேற்பார்வையாளர் பெரியசாமி ஆகியோர் மீது பாம்பன் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.