‘ரங்கம் ரங்கநாதர் கோயிலை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும்’ :

‘ரங்கம் ரங்கநாதர் கோயிலை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும்’ :
Updated on
1 min read

ரங்கம் ரங்கநாதர் கோயிலை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரங்கம் ரங்கநாதர் கோயிலை உலக புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என 2014-ம் ஆண்டு யுனெஸ்கோவுக்கு பரிந் துரை செய்யப்பட்டது.

ஆனால் அதற்குப்பின் 7 ஆண்டுகளாகியும் இதுவரை இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், உலக புராதன நாளான நேற்று திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக் குழு உறுப்பினரும், மூளை நரம்பியல் நிபுணரான டாக்டர் எம்.ஏ.அலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நிகழாண்டிலாவது ரங்கம் ரங்கநாதர் கோயிலை உலக புராதனச் சின்னமாக அறிவிக்க தமிழ்நாடு அரசும், இந்திய அரசின் தொல்லியல் துறையும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in