

வாகனங்களுக்கான எரிபொருளான எண்ணெய் வளம் குறைந்துவரும் நிலையில், அதனால் ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்தமின்சார வாகனங்களுக்கு மாற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மாசுபடுத்தாத, சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் சத்தமில்லாத, நவீனமான புதிய தலைமுறை மின்சார வாகனங்களை வாங்க மக்கள் விரும்புகிறார்கள். 2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாற்றப்பட கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க, மின்சார வாகனஉற்பத்தி மற்றும் பயன்பாடு திட்டத்துக்காக (எப்.எ.எம்.இ.) மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நாட்டிலுள்ள மொத்த கார்களின் எண்ணிக்கை யில், ஆடம்பர கார்கள் 12 சதவீதம், இருசக்கர வாகனங்கள் 70 சதவீதம், மூன்று சக்கர ஆட்டோக்கள் சுமார் 25 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இந்திய சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு 0.06% ஆகும். 2020-ம் ஆண்டு நாட்டில் 1,52,000 மின்சார இருசக்கர வாகனங்களும், 3400 கார்களும், 600 பேருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
முக்கியப் பிரச்சினை
ஒரு யூனிட்டுக்கு ரூ.19 கட்டணம்