

அரசுப் பேருந்து நடத்துநர் மீது குடிபோதையில் தாக்குதலில் ஈடுபட்ட 6 பேர் மீது, திருப்பூர் போலீஸார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந் துறையைச் சேர்ந்தவர் ஜெகன் (31). அரசுப் பேருந்து நடத்துநர். இவர், நேற்று முன்தினம் இரவு பேருந்தில் பணியில் இருந்தார். பூலுவபட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக உள்ளமதுபானக்கூடம் பகுதியில் இருந்துஇருசக்கர வாகனத்தில்இளைஞர்கள் சிலர் பேருந்தின் மீது உரசுவது போன்று வேகமாக வந்துள்ளனர். இதில் கோபமடைந்த ஓட்டுநர் தியாகராஜன் அவர்களை திட்டிஉள்ளார். பதிலுக்கு இளைஞர்களும் அவரை திட்டியுள்ளனர்.
இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்தபடி, பேருந்தின் பின் பகுதியை இளைஞர்கள் தட்டி உள்ளனர். இதுகுறித்து கேட்ட நடத்துநர் ஜெகனை, இளைஞர்கள் 6 பேரும் சேர்ந்து தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
இதுதொடர்பாக ஜெகன் அளித்த புகாரின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து, அடையாளம் தெரியாத 6 பேரையும் தேடி வருகின்றனர். திருப்பூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நடந்துநர் ஜெகன் சிகிச்சை பெற்று வருகிறார்.