

திருப்பூர் மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 11 போலீஸாருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி, பல்லடம் டிஎஸ்பி அலுவலகம், வீரபாண்டி காவல் நிலையம், உடுமலைப்பேட்டை ரோந்து போலீஸார் என மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 11 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, திருப்பூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். காமநாயக்கன் பாளையம் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் பணிபுரிந்து வந்தபோலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட காவல் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.