முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசுப் பணி :

முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசுப் பணி :

Published on

முன்னாள் ராணுவத்தினர் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வாய்ப்பு வழங்கப் படுகிறது, என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பு:

முன்னாள் படைவீரர்களின் மறு வேலைவாய்ப்பிற்காக மத்திய புனரமைப்பு இயக்ககம் மூலம் பல்வேறு மத்திய அரசு துறைகள், அரசு பொது நிறுவனங்களில் முன்னாள் படைவீரர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் பணியமர்த்தப்படுகின்றனர். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாகவும், நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு உரிய படிவம் டிஜிஆர் இணையதளம் www.dgrindia.com என்கிற முகவரியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்தப்படிவத்தை நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு (exwelnmk@tn.gov.in) அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in