வாக்கு எண்ணும் மையத்துக்குள் - கணினி வல்லுநர்களை அனுமதிக்கக் கூடாது : மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர்கள் மனு

வாக்கு எண்ணும் மையத்துக்குள் -  கணினி வல்லுநர்களை அனுமதிக்கக் கூடாது :  மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர்கள்  மனு
Updated on
1 min read

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் வேட்பாளர்கள் சார்பில் கண்காணிக்கும் நபர்களை தவிர வேறுயாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி திமுக வேட்பாளர்கள் மு. அப்பாவு (ராதாபுரம்), அப்துல்வகாப் (பாளையங்கோட்டை), ஆவுடையப்பன் (அம்பாசமுத்திரம்) ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு விடம் மனு அளித்தனர்.

மனு விவரம்:

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளில் தேர்தலின் போது வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாளையங்கோட்டையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாக்கப்பட்ட அறைகளில்வைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் காட்சிகள் எல்இடி திரையில் திரையிடப்படுகிறது. இதன்மூலம் வேட்பாளர்களின் சார்பாக பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள் 144 கணினி வல்லுநர்களை உள்ளே செல்ல மாவட்ட ஆட்சியர் அனுமதித்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட மின்னணு இயந்திரங்களில் தவறு செயவதற்காக அனுப்பப்பட்டு இருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, வாக்கு எண்ணிக்கை முடியும்வரை கணினி பொறியியல் வல்லுநர்கள் உள்ளே செல்ல அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சார்பாக கண்காணிக்கும் நபர்களை தவிர வேறுயாரையும் பொறியியல் கல்லூரி வளாகத்தினுள் அனுமதிக்க கூடாது. தவறினால் திமுக சார்பில் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in