சமூக இடைவெளியின்றி ஆதார் மையத்தில் கூட்டம் :

சமூக இடைவெளியின்றி ஆதார் மையத்தில் கூட்டம்  :
Updated on
1 min read

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவைமையத்துக்கு நாள்தோறும்நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு வந்து நிற்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியைபின்பற்ற அறிவுறுத்தும் கருவிபொருத்தப்பட்டிருந்தது. அதில், வரிசையில் நிற்போர் தானியங்கி கருவியால் கண்காணிக்கப்பட்டு, ‘போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும்’ என்று ஒலிப்பெருக்கியில் தானாகவே அந்தகருவி அறிவிக்கும். தற்போது இரண்டாம் அலை தொடங்கியுள்ள நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்துக்குகூட்டம், கூட்டமாக மக்கள் வருகின்றனர். அங்கு செயல்பட்டு வந்ததானியங்கி கருவி தற்போது செயல்படுவதில்லை.

இதுதொடர்பாக அங்கிருந்தவர்கள் கூறும்போது, "போதிய சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வைக்கப்பட்டிருந்த தானியங்கி கருவி செயல் படாததால், ஆதார்மையத்துக்கு வருவோர் போதிய விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். திருப்பூர் ஆட்சியர் அலுவலக ஆதார் சேவை மையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காத்திருந்த பொதுமக்கள். படம்: இரா.கார்த்திகேயன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in