

பல்லடம் குன்னாங்கல் பாளையத்தைச் சேர்ந்த சாய ஆலை உரிமையாளர் வெங்கடாச்சலம் (62). பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியிலுள்ள எஸ்பிஐ வங்கிக்கு, நேற்று மதியம்காரை ஓட்டிச் சென்றுள்ளார். வங்கியில் தொழில் நிமித்தமாக ரூ.8 லட்சம் பணத்தை எடுத்துள்ளார். காரின் முன் இருக்கையில் பணத்தை வைத்துவிட்டு, காரை ஓட்ட சென்றுள்ளார்.
பின்தொடர்ந்து வந்த ஒருவர், அவரது இடுப்பை கிள்ளியுள்ளார். யாரென்று பார்ப்பதற்குள், காரின் முன் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சத்தை மற்றொருவர் எடுத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் இருவரும் தப்பிவிட்டனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். போலீஸார் கூறும்போது, "வங்கியில் இவர் பணம்எடுத்து வருவதை இருவரும் நோட்ட மிட்டு அவரது கவனத்தைதிசை திருப்பி நூதன முறையில் வழிப்பறி செய்துள்ளனர்.
வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகிறோம்" என்றனர்.