

சேலம் மாவட்டத்தில் நேற்று 195 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 175 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 88 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில், சேலம் மாநகராட்சி பகுதியில் 110 பேரும், ஓமலூரில் 15 பேர், மேட்டூரில் 9 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 8 பேர், நங்கவள்ளி, பனமரத்துப் பட்டி, பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், எடப்பாடியில் 4 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவ மனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டு 1,243 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 66 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
கடந்த ஒரே வாரத்தில் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது