

சேலத்தின் முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள சுவர்களில் எம்எம்எம் கார்னர் என்ற அடையாளத்தை ஏற்படுத்தி, வாரந்தோறும் விழிப்புணர்வு பொன்மொழிகளை கடந்த 27 ஆண்டுகளாக எழுதி வந்த சேலம் ஓவியர் பசுபதிநாதன் நேற்று காலமானார்.
சேலம் தாசநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பசுபதிநாதன் (64). ஓவியரான இவர் சேலம் திருவள்ளுவர் சாலை சந்திப்பு, தாதகாப்பட்டி கேட், முள்ளுவாடி கேட் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள் உள்ள சுவர்களில் எம்எம்எம் கார்னர் என அடையாளப்படுத்தி சுவரை வண்ணத்தில் அழகுபடுத்தி அதில் மக்களை சிந்திக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு வரி வாசகத்தை கடந்த 27 ஆண்டாக எழுதி மக்களை ஈர்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று பசுபதிநாதன் காலமானார். அவருக்கு அலமேலு (62) என்ற மனைவியும், மகன் தர் பிரபு, மகள் ஹேமலதா ஆகியோர் உள்ளனர்.