Published : 16 Apr 2021 03:13 AM
Last Updated : 16 Apr 2021 03:13 AM
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகளும் அமலாக்கப்பட்டன. அன்று முதல் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர், வீடியோ கண்காணிப்புக் குழுவினர் களத்தில் பணியாற்றினர்.
இவர்கள் மேற்கொண்ட சோதனையில், மொத்தம் ரூ. 9.23 கோடி மதிப்பிலான பொருட்கள், ரூ.79.52 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அதன்பின், உரிய ஆவணங்களை கொண்டுவந்து காட்டுவோரிடம் பணம், பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.79.52 லட்சத்தில் ரூ.54 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரூ.6.49 லட்சம் பணத்துக்கு காவல்துறை மூலம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9.23 கோடி மதிப்பிலான பொருட்களில், ரூ.5.91 கோடி மதிப்பிலான பொருட்கள் உரிய ஆவணங்கள் சரி பார்க் கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப் பட்டுள்ளன.
ரூ.6.62 லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு காவல் துறை மூலம் எப்ஐஆர் பதிவு செய் யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3.24 கோடி மதிப்பிலான ஒப்படைக்க வேண்டிய பொருட்களில் ரூ.3.17 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், ரூ.4.50 லட்சம் மதிப்பிலான எல்இடி டிவிகள், ரூ.4,800 மதிப்பிலான எவர்சில்வர் பாத்திரங்கள் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT