

திருநெல்வேலி டவுன் நயினார்குளம் காய்கனி சந்தை வளாகத்தில் 55 சில்லறை விற்பனை கடைகள் அமைக்கப்படுகின்றன.
திருநெல்வேலி டவுன் நயினார்குளம் பகுதியிலுள்ள மொத்த காய்கனி விற்பனை சந்தையில் கடந்த வாரத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு செயல்பட்டுவந்த 55 சில்லறை விற்பனை கடைகளை மட்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மாற்று இடங்களில் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மொத்த காய்கனி விற்பனை மைய வளாகத்தில் சுமார் இரண்டரை ஏக்கரில் உள்ள காலியிடத்தில் சில்லறை விற்பனை கடைகளை மாற்ற மாநகராட்சியிடம் வியாபாரிகள் அனுமதி கேட்டுள்ளனர்.
இந்நிலையில் அக்காலியிடத்தை சீரமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதனிடையே மொத்த சந்தை அமைந்துள்ள சாலையோரத்தில் தற்காலிக கடைகளை அமைத்து காய்கனிகளை சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.