

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கொண்டையன்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (33). பெருமாநல்லூர் அருகே காளிபாளையத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை இருசக்கர வாகனத்தில் அவிநாசி வரை சென்றுவிட்டு, மீண்டும் காளிபாளையத்தில் உள்ள நிறுவனத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.