

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக 304 பேருக்கு கரோனா தொற்று ஏற் பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து நேற்று வரை இம்மாவட்டத்தில் 16,125 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 15,581 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 431 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களையும் சேர்த்து இது வரையில் 11,244 பேருக்கு தொற்றுஏற்பட்டு, 10,896 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 240 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்றுபுதிதாக 175 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இம்மாவட் டத்தில் 26,977 பேருக்கு கரோன தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் நேற்று வரை 25,660 பேர் மருத்து வமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்றுவந்த பண்ருட்டியைச் சேர்ந்த 42 வயது டைய ஆண், கடலூர் அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனகிரியைச் சேர்ந்த 59 வயது முதியவர் ஆகிய இருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 296 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்ட மருத்துவமனைகளில்723பேரும், இதர மாவட்டத்தில் உள்ள மருத்து வமனைகளில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த 298 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் 97,784 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரையில் 81,452 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 41,255 பேருக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது.