கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 156 பேருக்கு கரோனா பாதிப்பு :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 156 பேருக்கு கரோனா பாதிப்பு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 156 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 1310 பேருக்குகரோனா பரிசோதனை மேற் கொள்ளப் பட்டது. இந்நிலையில், நேற்று 156 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கரேனாவால் பாதிக்கப்பட்ட 47 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 அரசு மற்றும் 3 தனியார் கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகங்கள் மூலம் நேற்று வரை 2,49,624 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

74 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 486 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 8 ஆயிரத்து 594 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 773 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 1,01,635 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in