

கரோனா தொற்று பரவல் காரணமாக சித்திரை முதல் நாள் புனித நீர்எடுப்பது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறும்போது,"அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைநிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த காலங்களில் போராட்டக் குழுவினரால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2015-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை 1-ம் தேதி மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயிலில்இருந்து புனித நீர் எடுத்து வந்து, திட்டத்தால் பயன்பெறும் கிராமங்களில் உள்ள கோயில்களில் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தோம்.
தற்போது கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு இன்று (ஏப்.14) சித்திரை 1-ம் தேதி நடைபெற வேண்டிய தீர்த்தக் கூட யாத்திரை ரத்து செய்யப்படுகிறது" என்றார்.