சிதம்பரம் அருகே தாயை கொலை செய்த மகன் கைது :

சிதம்பரம் அருகே தாயை கொலை செய்த மகன் கைது :
Updated on
1 min read

சிதம்பரம் அருகே தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே மணலூரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (45). புவனகிரி அருகே பெருமாத்தூரில் கவரிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (35). இவர்களது 15 வயது மகன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சங்கீதாவுக்கு சிலருடன் கூடா நட்பு இருந்ததாக தெரிகிறது. இதை பாலமுருகன், அவரது மகன் ஆகியோர் கண்டித்துள்ளனர். சங்கீதாவின் கூடா நட்பால் ஊரிலும் தகராறு நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து சங்கீதா அவரது தாய் வீடான சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடி கிராமத்துக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை சங்கீதா மணலூர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அவரது மகன் அவரை ஆபாசமாக திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது மகனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரது தந்தை பாலமுருகனையும் தேடி வருகின்றனர்.

தாயை மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in