

தஞ்சாவூர் மாவட்டத்தில் போது மான அளவுக்கு ரசாயன உரங்கள் கையிருப்பில் உள்ளன. அவற்றை பழைய விலைக்கே வாங்கலாம் என மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் அ.ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்துள்ளது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற் போது கோடை நெல் மற்றும் முன்பட்ட குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தற்போது, தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 9,000 டன், டிஏபி 1,700 டன், காம்ப்ளக்ஸ் 4,800 டன், பொட்டாஷ் 4,000 டன் கையிருப்பில் உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த உரங்களின் இருப்பு, உர விலை உயர்வுக்கு முந்தைய இருப்பாக உள்ளதால், விவசாயி கள் இவற்றைப் பழைய விலையி லேயே வாங்கிப் பயனடையலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டாரத்தில் மட்டும் புதிய விலையில் உரம் இருப்புப் பெறப்பட்டுள்ளது. மேலும், வரும் வாரத்தில் 3,000 டன் டிஏபி உரம் புதிய விலையில் இருப்பு வைக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
எனவே, உர விற்பனை நிலை யங்களில் ஏற்கெனவே இருப்பில் உள்ள உரங்களை விவசாயிகள் வாங்கும்போது, உர மூட்டைகள் மீது அச்சடிக்கப்பட்டுள்ள விலை யைப் பார்த்து உறுதி செய்த பின்னர், அதற்குரிய தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்ள லாம்.
உர மூட்டைகள் மீது விற் பனை விலை அழிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப் பட்டாலோ உடனடியாக விவசா யிகள் தங்களது வட்டார வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநரிடம் (தரக்கட்டுப்பாடு) தகவல் அளிக்கலாம்.
மேலும், உர விற்பனையாளர் கள் விவசாயிகளுக்கு மானிய விலை உரங்களை, தங்களுடைய ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.
உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை தவறாமல் பராமரிக்க வேண்டும்.
கூடுதல் விலைக்கு மற்றும் உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபடும் உர விற்பனையாளர்கள் மீது உரக் கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என தெரிவித் துள்ளார்.