Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி, பயிற்சி முகாம் :

காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சில அமைப்புகளுடன் சேர்ந்து இந்த போட்டிகளை நடத்தியது. இந்த அமைப்பின் தலைவர் எம்.கே.ஹரீஷ் சுமார் 100 பேருக்கு போட்டிகளுக்கு தயாராவதற்கான பயிற்சிகளை அளித்தார். இதைத் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. வேறு சில அமைப்பின் செயலர்களும் பங்கேற்று போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சிகளை அளித்தனர். கரோனா விதிமுறைகளை பின்பற்றி இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x