

வேளாண் துறை சார்பில் காட்டுமன்னார்கோவில் வட்டாரம் முட்டம்பகுதியில் ‘ஆடுதுறை 3’ என்ற உளுந்து ரகம் 5 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு 25 ஏக்கர் உளுந்துவிதைப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இது போல குருங்குடி, பழஞ்சநல்லூர் பகுதியில் 8 விவசாயிகளுக்கு ‘வம்பன் 8’ என்ற உளுந்து வழங்கப்பட்டு 20 ஏக்கரில் உளுந்து விதைப் பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.
விதை பண்ணைக்காக உளுந்து வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு உளுந்து விவசாய தொழில்நுட்பம், நோய் தடுப்பு முறை உள்ளிட்ட ஆலோசனைகளை வேளாண் துறை அதிகாரிகள் வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பழஞ்சநல்லூரில் உள்ள உளுந்து விதைப் பண்ணை வயலை வட்டார விதை சான்று அலுவலர் சுகந்தி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உதவி விதை அலுவலர் அருள், விவசாயிகள் உடனிருந்தனர்.