திண்டுக்கல்லில் 4 இடங்களில் : கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

திண்டுக்கல்லில் 4 இடங்களில் : கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :
Updated on
1 min read

திண்டுக்கல் நாகல் நகரில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச் சங்கத்தினர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார அதிகாரி லட்சியவர்னா தலைமை வகித்தார். இதில் நாகல்நகர் பகுதி பொதுமக்கள், வர்த்தகர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

சுகாதார அதிகாரி லட்சியவர்னா கூறுகையில், 4இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 500 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தொடர்ந்து பகுதி வாரியாக சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in