Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட நிர்வாகிகள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக் கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் தர்ம.தங்கவேலை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலை வர் டி.பாண்டியனுக்கு ஒன்றியச் செயலாளர் பதவி அளிக்கப்பட் டதால், அவர் தர்ம.தங்கவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதேபோல, ஆலங்குடி அதி முக வேட்பாளர் மாற்றப்படாத தைக் கண்டித்து விராலிமலை தொகுதியில் அமைச்சர் சி.விஜய பாஸ்கருக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் நெவளிநாதன் சுயேச்சையாக வேட்புமனு தாக் கல் செய்தார். அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை யடுத்து தனது வேட்புமனுவை நெவளிநாதன் வாபஸ் பெற்றார்.
அதேசமயம், ஆலங்குடி தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்ற நடவடிக்கை எடுக்காத அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக மறைந்த முன்னாள் அமைச் சர் வடகாடு எ.வெங்கடாசலத்தின் மகள் தனலட்சுமி விராலிமலை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இவருக்கு ஆதர வாக அதிமுக விவசாய அணி மாவட்டச் செயலாளர் என்.மாசி லாமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.ஆர்.கணேசன், இவரது மகனும், புதுக்கோட்டை 41-வது வார்டு செயலாளருமான கே.ஆர்.ஜி.பாண்டியன் ஆகியோர் செயல் பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாள ரும், அமைச்சருமான சி.விஜயபாஸ் கரின் பரிந்துரையின்பேரில் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்ட மாசிலாமணி, கே.ஆர்.கணேசன், பாண்டியன், தனலட்சுமி ஆகியோர் அதிமுக வின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந் தும் நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT