

கரோனா கட்டுப்பாடுகள் காரண மாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று சாலை மறி யலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து கரூர் மற்றும் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைகளுக்கு செல்கின்றனர். கரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து மட்டுமே செல்ல வேண்டும். நின்றுகொண்டு செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ண ராயபுரம் பேருந்து நிறுத்தம் வழி யாக கரூர் சென்ற பேருந்துகளும், கரூரில் இருந்து திருச்சி செல்லும் பேருந்துகளும் நேற்று அங்கு நிற்காமல் சென்றன.
இதனால், கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் ஆத்திரமடைந்து கிருஷ்ணராயபுரத்தில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாயனூர் போலீஸார், மறியலை கைவிடக் கோரி பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பேருந்துகள் நிற்காததால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஊதிய இழப்பு ஏற்படும். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். அல்லது முழு ஊரடங்கு பிறப் பிக்க வேண்டும் எனக் கூறி, போலீ ஸாருடன் பயணிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கிருஷ்ணராய புரத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் மற்றும் போக்கு வரத்துத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, பயணிகள், பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மேலும், அவ்வழியே வந்த பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக் கப்பட்டது. கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் இப் பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.