கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் - பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் கூட்டம் :

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் -  பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் கூட்டம் :
Updated on
1 min read

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் 16-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுகளை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள் ளது.

சேலம் மாவட்டத்தில் 322 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 38,254 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்களில், செய்முறை பாடங்கள் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு, அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செய்முறைத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்று (12-ம் தேதி) வழிகாட்டுதல் கூட்டம் நடத்தப்படுகிறது.

சேலம், சேலம் ஊரகம், ஆத்தூர்,சங்ககிரி, எடப்பாடி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில், அந்த கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில், கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, கூட்டத்தில் விளக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

செய்முறைத் தேர்வு 16-ம் தேதிதொடங்கி 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. செய் முறைத் தேர்வில், குறிப் பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள், சிறு சிறு குழுக்களாக அனுமதிக்கப்படுவர். அனைவரும் முகக் கவசம் அணிந்திருப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை கிருமி நாசினை கொண்டு சுத்தம் செய்வது ஆகியவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னர் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப் படுவர். கரோனா பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனியாக வேறு நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகள் குறித்த விவரம் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். வழிகாட்டுதல் கூட்டத்தின்போது, செய்முறைத் தேர்வுகளை மேற்பார்வையிடும் புறத்தேர்வாளர்கள் பட்டியலும் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப் படும்.

இவ்வாறு கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in