Regional02
கரோனா கட்டுப்பாட்டை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் :
நகரின் முக்கிய சாலை வழியாகச் செல்லும் இப்பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிப்பதைப் பார்த்தும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதனால், கரோனா தொற்று குறைவாக உள்ள காஞ்சிபுரம் நகரில், இனி தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, போக்குவரத்து போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேருந்துகளை கண்காணித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
