அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் - குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.100 ஆக குறைக்க வேண்டும் : அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் -  குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.100 ஆக குறைக்க வேண்டும் :  அஞ்சல் ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
Updated on
1 min read

தேசிய அஞ்சல் ஊழியர் சங்க 27-வது தமிழ் மாநில மாநாடு மாநிலத் தலைவர் சத்திய நாராயணன் தலைமையில் கரூ ரில் 2 நாட்கள் நடைபெற்றன. மாநி லச் செயலாளர் பி.சுகுமாறன், சம்மேளன பொதுச்செயலாளர் பி.சிவக்குமார், அகில இந்திய பொதுச்செயலாளர் என்.நிஜார் முஜாபர், மாநிலப் பொருளாளர் மணவாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50 என்பதை ரூ.500ஆக உயர்த்தியதை ரூ.100ஆக குறைக்கவேண்டும். பட்டுவாடா தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பட்டுவாடா சம்பந்தப்படாத பணி களில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

பின்னர், சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் என்.நிஜார்முஜாபர் செய்தி யாளர்களிடம் கூறியது: தமிழ கத்தில் அஞ்சல்காரர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்கள் 400-க்கும் மேல் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். கரோனா தொற்று காலத்திலும் பணிபுரிந்த அஞ்சல் ஊழியர்களின் நிலுவையில் உள்ள பஞ்சப்படி உயர்வுகளை வழங்கவேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in