

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ளப் படும் அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண் டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவ டிக்கைகள் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னர் ஆட்சியர் கூறியது: தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஏப்.10(இன்று) முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து வழிபாட்டுத் தலங் களிலும் இரவு 8 மணி வரை மட்டும் பொதுமக்கள் அனுமதிக் கப்படுவார்கள். எனினும் கோயில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங் கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை பின்பற்ற வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
எனவே கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தளர்வுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.