

மத்திய அரசு பணியில் ஈடுபட்டு வரும் அலுவலர், வாக்குச்சாவடி முகவராக செயல்பட்டது குறித்து விசாரணை செய்து வருவதாக, வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேகலசின்னம்பள்ளியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். இதில், சட்டப்பேரவை தேர்தலில் மேகலசின்னம்பள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்ட 247 என்ற வாக்குச்சாவடி மையத்தில் கமலேசன் என்பவர், வாக்குச்சாவடி முகவராக பணியாற்றினார். இவர், அங்குள்ள அஞ்சல் நிலையத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முகவராக கமலேசன் என்பவர் செயல்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, வேப்பனப்பள்ளி தேர்தல் நடத்தும் அலுவலர் கோபுவிடம் கேட்டபோது, ‘‘அலுவலராக பணி யாற்றும் கமலேசன் என்பவர், வாக்குச்சாவடி முகவராக பணி யாற்றியது குறித்து புகார் வந்துள்ளது. உரிய விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.