

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, "கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், 80 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். எஞ்சிய 20 பேர் தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்கள். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். வெளியே சென்று வருபவர்கள் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவற்றை கடைப்பிடித்தால், தொற்றில் இருந்து தங்களையும், குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ளலாம்" என்றனர்.