Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

சித்திரை விஷு திருவிழா - குற்றாலநாதர் கோயிலில் இன்று தேரோட்டம் :

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோயில் சித்திரை விஷு திருவிழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.

இத்திருவிழா கடந்த 5-ம் தேதிதொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர்சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டமும் நடைபெறுகிறது.

மாலையில் பூதகிளி வாகனத்தில் சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளல் நடைபெறுகிறது. வரும் 11-ம் தேதி தாண்டவ தீபாராதனையும், இரவில் புஷ்ப பல்லக்கில் வெள்ளை சார்த்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. வரும் 14-ம் தேதி காலை 9 மணிக்கு விஷு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x