Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 87,411 பேருக்கு கரோனா தடுப்பூசி :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் இதுவரை 87411 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதலில், சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும், தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 60 வயதை கடந்தவர்களுக்கும், ஏப்.1-ம் தேதி முதல் 45 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசி விரிவுபடுத்தப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இதுவரை 87,411 பேருக்கு, கரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது. அவற்றில், கோவிஷீல்டு 78,212பேருக்கும், கோவாக்சின் 9,199 பேருக்கும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் 2-வது டோஸ் 4 - 6 வாரங்களில் போட வேண்டும். ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோஸ் கால அளவு 6 - 8 வாரங்களாக மாற்றப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உள்ளவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x