Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு :

கிருஷணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 2298 வாக்குச்சாவடிகளில் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்து வாக்குச்சாவடியில் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திரங் களுக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

இரவு 9 மணி முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், போலீஸ் பாது காப்புடன், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பாலிடெக்னிக் கல்லூரியில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்க, 6 அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, தேர்தல் பொது பார்வையாளர் பார்த்தசாரதி சென்ஷர்மா மற்றும் திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், வேப்பனப்பள்ளி முருகன், பர்கூர் மதியழகன் உட்பட அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் அறையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு,பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக எஸ்பி பண்டிகங்காதர் கூறும்போது, வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மத்திய துணை ராணுவப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, கல்லூரி வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை;ச் சேர்ந்த போலீஸார் என 250-க்கும் மேற்பட்டவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தொழில் நுட்பக் கல்லூரியைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் 3 சுழற்சி முறையில் பணிபுரிய உள்ளனர் என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x