அதிமுக வேட்பாளர் குறித்து அவதூறு?  -  திமுகவைச் சேர்ந்தவர் மீது வழக்கு :

அதிமுக வேட்பாளர் குறித்து அவதூறு? - திமுகவைச் சேர்ந்தவர் மீது வழக்கு :

Published on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா போட்டியிட்டார். இந்நிலையில், பி.வி.ரமணா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள், புகைப்படங்கள் பரவியதாகப் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவரும், திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளரின் தலைமை முகவருமான வழக்கறிஞர் செளந்தரராஜன், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தனி மனிதருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக மாவட்ட காவல் துறையில் கடந்த 5-ம் தேதி புகார்அளித்தார். அதன் அடிப்படையில், மணவாளநகர் போலீஸார், போளிவாக்கத்தில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த கிஷோர்குமார் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in