Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு :

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் உள்ள 4,902 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பெருமாள்பட்டுவில் உள்ள தனியார் கல்வி நிறுவன வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டன. மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல்அலுவலர் பொன்னையா மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில், காப்பு அறைகளில் (ஸ்ட்ராங் ரூம்) அவை வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. அங்கு, துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீஸார், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், மாவட்ட போலீஸார் என மொத்தம் 390 பேர், மூன்று அடுக்கு பாதுகாப்புடன், 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளின் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பொன்னேரிக்கரை பல்கலைக்கழக பொறியில் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் காப்பு அறைகளில் வைக்கப்பட்டு, தேர்தல் பார்வையாளர்கள் கைலாஷ் சந்த் குப்தா, ராகேஷ்குமார் வர்மா, மாவட்ட தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், சென்னை கிறிஸ்தவ கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திலும், செங்கல்பட்டு, திருப்போரூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் தண்டரை ஆசான் நினைவு பொறியியல் கல்லூரியிலும், மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளுக்கான இயந்திரங்கள் நெல்வாய் கூட்டுரோட்டில் உள்ள ஏசிடி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, செங்கல்பட்டு எஸ்.பி. சுந்தரவதனம் கூறும்போது, "தண்டரை, நெல்வாய் பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் துணை ராணுவப் படையினர், ஆயுதப்படை போலீஸார், உள்ளூர் போலீஸார் என 360 பேர், சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 85 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x