Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் உட்பட 4 தொகுதிகளின் - வாக்கு இயந்திரங்களுக்கு காரைக்குடியில் பாதுகாப்பு :

காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் மானாமதுரை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கும் அலுவலர்கள்

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்க மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் இருந்து 126 மண்டல அலுவலர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

அங்கு ஒவ்வொரு தொகுதிக் குமான வாக்குப்பதிவு இயந் திரங்கள் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத் தேர்தல் அலு வலரும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி, தேர்தல் பார்வையாளர்கள் (பொது) சோனாவனே, முத்துக்கிருஷ்ணன் சங்கரநாராயணன் தலைமையில் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் முன்னிலையில் வாக் குப்பதிவு இயந்திரங்கள் வைக் கப்பட்ட பாதுகாப்பு அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.

மேலும், இயந்திரங்களைப் பாதுகாக்க மூன்றடுக்குப் பாது காப்பு போடப்பட்டுள்ளது. நான்கு தொகுதிகளுக்கும் சேர்த்து முதலடுக்கில் 84 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் (துணை ராணுவத்தினர்), இரண்டாவது அடுக்கில் 80 பட்டாலியன் போலீ ஸாரும், மூன்றாவது அடுக்கில் 160 உள்ளூர் போலீஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று ஷிப்டாக 24 மணி நேரமும் கண்காணிக்க உள்ளனர்.

இதுதவிர 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வட்டாட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுக்கள் கண்காணிக்க உள்ளன. அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், டிஎஸ்பி தினமும் பார்வையிட உள்ளனர். ஆட்சியர் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பார்வையிட உள்ளார்.

முகவர்கள் தங்கி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படாமல் தடுக்க இரு தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x