Published : 08 Apr 2021 03:13 am

Updated : 08 Apr 2021 03:13 am

 

Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

மானாமதுரையில் தொழிலாளியை கொன்ற இளைஞர் கைது :

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கூலித்தொழிலாளியை மண்வெட்டியால் தாக்கிக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

பரமக்குடி அருகே வெளிச்சத்தைநல்லூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குணசேகர் (60). இவர் மானாமதுரை கன்னார்தெரு அருகில் மூங்கில் ஊருணி பகுதியில் வசித்து வந்தார். அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு நேற்று மாலை மதுக் குடிக்கச் சென்றார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சன்னாசி மகன் சரவணனுக்கும் (28), அவருக்கும் தகராறு ஏற்பட்டது.


இதில் ஆத்திரமடைந்த சரவணன் வீட்டுக்குச் சென்ற குணசேகரை வழிமறித்து மண்வெட்டியால் தாக்கினார். இதில் அந்த இடத்திலேயே குணசேகர் இறந்தார். மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து சரவணனைக் கைது செய்தனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x