Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு :

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரியில் 8-ம் தேதி பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

குமரிக்கடல் பகுதியில் உருவாக உள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 9 முதல் 11-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். 7-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், தென்காசி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x