

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் 73.98 சதவீதம் பதிவான நிலையில், காட்பாடி தொகுதியில் 90,142 ஆண்களும், 93,768 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 1,83,930 பேர் (74%) வாக்களித்துள்ளனர். வேலூர் தொகுதியில் 87,218 ஆண்களும், 90,547 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேர் என மொத்தம் 1,77,769 பேர் (70.25%) வாக்களித்துள்ளனர். அணைக்கட்டு தொகுதியில் 95,085 ஆண்களும், 1,01,057 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேர் என மொத்தம் 1,96,146 பேர் (77.05%) வாக்களித்துள்ளனர்.
அதேபோல், கே.வி.குப்பம் தொகுதியில் 84,670 ஆண்களும், 87,672 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் ஒருவர் என மொத்தம் 1,72,343 பேர் (76.50%) வாக்களித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட குடியாத்தம் தொகுதியில் 1,02,989 ஆண்களும், 1,07,184 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேர் என மொத்தம் 2,10,187 பேர் (72.56%)வாக்களித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஆண்கள் 4,60,104 பேர் வாக்களித்துள்ள நிலையில், பெண்கள் 4,80,228 பேர் வாக்களித்துள்ளனர். இது ஆண்களை விட 20,124 வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு தொகுதியில் 1,02,873 ஆண்களும், 1,04,754 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 2,07,628 பேர் (79.62%)வாக்களித்துள்ளனர்.
சோளிங்கரில் குறைந்த வாக்கு