

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குகளை செலுத்தினர்.
திருப்பூர் தெற்கு தொகுதியில்மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வராஜ், கொங்குநகர் வெங்கடாஜலபதி சாலை 1-வது ரயில்வே கேட் அருகே வெங்கடாஜலபதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.
இதே தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி, பட்டுக்கோட்டையார் நகர்மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அனுஷா ரவி, கேபிஎன் காலனி சமுதாயக் கூடத்திலும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக வேட்பாளருமான சு.குணசேகரன், வாலிபாளையம் மாநகராட்சிப் பள்ளியிலும் வாக்களித்தனர்.
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், வெங்கமேடு வி.கே அரசுப் பள்ளியில் வாக்களித்தார். திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். ரவி (எ) சுப்ரமணியம், பாளையக்காடு முருகப்பசெட்டியார் பள்ளிக்கு, இருசக்கரவாகனத்தில் வந்து வாக்களித்தார். மக்கள் நீதி மய்யம்வேட்பாளர் சு.சிவபாலன், நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், தேமுதிக வேட்பாளர் செல்வகுமார், சிறுபூலுவபட்டி அரசுப் பள்ளியிலும் வாக்களித்தனர்.
பல்லடம்
தாராபுரம்
அவிநாசி
உடுமலை
மடத்துக்குளம்
உதகை