

கிருஷ்ணகிரியில் வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அவதியுற்று பயணிகள், பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நேற்று வாக்குப்பதிவு செய்ய சொந்த ஊர்களுக்குச் செல்ல, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். காலை 6 மணி முதல் திருப்பத்தூர், வேலூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் இயக்கப் படாததால் பயணிகள் அவதிக்குஉள்ளாகினர். இதில் ஆத்திர மடைந்தவர்கள், பேருந்து நிலையத்தின் வெளியே சாலை யில் நின்று, அவ்வழியே சென்ற பேருந்துகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் பாஸ்கர், எஸ்ஐ சிவசந்தர் மற்றும் போலீஸார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பயணிகள் செல்ல பேருந்து ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர்.