காஞ்சியில் கரோனா தொற்று ஏற்பட்ட யாரும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவில்லை :

காஞ்சியில் கரோனா தொற்று ஏற்பட்ட யாரும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவில்லை :
Updated on
1 min read

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனி கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா காரணாக 94 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் தொகுதியில் 19 பேரும், பெரும்புதூர் தொகுதியில் 13 பேரும், உத்திரமேரூர் தொகுதியில் 10 பேரும், ஆலந்தூர் தொகுதியில் 52 பேரும் என மொத்தம் 94 பேர் உள்ளனர். அவர்களிடம் வாக்களிக்க விருப்பம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அவர்கள் தங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு வாக்களிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டனர் என்றார். மருத்துவனையில் இருந்த சிலர் மட்டும் ஏற்கெனவே தபால் மூலம் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in