Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

தனி வாக்குச்சாவடி, வாய்க்கால் அடைப்பு பிரச்சினைகளுக்காக - உசிலை. உட்பட 4 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு :

மதுரை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் தனி வாக்குச்சாவடி அமைக்காததைக் கண்டித்து இரு கிராமத்தினர் வாக்குப்பதிவைப் புறக்கணித்தனர்.

உசிலம்பட்டி தொகுதி பேரையூர் அருகே உள்ள குன்னுவார்பட்டி கிராமத்தினர் 3 கி.மீ. தொலைவில் உள்ள உலைப்பட்டிக்குச் சென்று வாக்களித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு நடந்த கோயில் திருவிழாவில் குன்னுவார்பட்டி, உலைப்பட்டி கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கொலையில் முடிந்தது.

இதற்கிடையே உலைப்பட்டி யில் உள்ள வாக்குச்சாவடிக்கு செல்ல மாட்டோம் எனவும், குன்னு வார்பட்டியில் தனி வாக்குச்சாவடி அமைத்துத் தரக்கோரி அக்கிராமத் தினரும், உலைப்பட்டியில் உள்ள மற்றொரு தரப்பினரும் வலி யுறுத்தி இருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் தற்போது கால அவகாசம் இல்லாததால், அடுத்து வரும் தேர்தலில் தனி வாக்குச் சாவடி அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஏற்காத குன்னுவார்பட்டி கிராமத்தினரும், உலைப்பட்டியில் ஒரு தரப்பினரும் உட்பட 800-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குப்பதிவை புறக்கணித்தனர்.

திருச்சுழி

திருச்சுழி அருகே உள்ள கீழஇடையன்குளம் கண்மாய் நீர் நிரம்பி அதன் உபரி நீர் அருகே உள்ள மயிலி கிராமத்துக்கு வரும். ஆனால், சில ஆண்டுகளாகப் போதிய மழை இல்லாததாலும், கீழஇடையன்குளம் கண்மாயில் நீர் நிரம்பாததாலும் உபரி நீர் செல்லும் வாய்க்கால் அடைக்கப்பட்டது. இதனால், மயிலி கிராமத்துக்கு உபரி நீர் செல்வது தடைபட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் கீழ இடையன்குளம் கண்மாய் நிரம்பியது. அதன் உபரி நீர் வாய்க்கால் வழியாக மயிலி கிராமத் துக்கு வந்தது. ஆனால், சிலர் அந்த வாய்க்காலை அடைத்தனர். தங்கள் கிராமத்துக்குப் போதிய தண்ணீர் கிடைக்காது என்பதால் கால்வாய் அடைக்கப்பட்டதாக கிராம மக்கள் கூறினர். இதுதொடர் பாக கீழ இடையன்குளம் மற்றும் மயிலி கிராம மக்க ளிடையே பிரச்சினை ஏற்பட்டது. ஆட்சியர் இரா.கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன் பாடு ஏற்படவில்லை. மயிலி கிராமத்துக்கு உபரி நீர் வழங்க கீழ இடையன்குளம் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மயிலி கிராமத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச் சாவடியில் மொத்தம் உள்ள 294 வாக்காளர் களில் 17 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். மற்றவர்கள் வாக்களிக்கவில்லை.

நிலக்கோட்டை

நிலக்கோட்டை தொகுதி, செம்பட்டி அருகேயுள்ள காமுபி ள்ளைசத்திரம் கிராமத் தில் உள்ள அரசுப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு தேர்தலிலும் இந்த கிராம மக்கள் அனைவரும் தங்கள் ஊரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வந்துள்ளனர். இந்தமுறை காமு பிள்ளைசத்திரத்தின் ஒரு பகுதியை சேர்ந்த 290 வாக்காளர்கள், மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுக்குலாபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க மாற்றப்பட்டனர்.

இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதைக் கண்டித்து நேற்று 290 வாக்காளர்களும் தேர்தலை புறக்கணித்தனர்.

கடமலைக்குண்டு

தேனி மாவட்டம், கடமலைக் குண்டு அருகே உள்ளது பாலூத்து. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் தேவராஜ் நகர், கொம்பு காரன் புலியூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வாக்காளர் களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம் பப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று தேவராஜ் நகரைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி என்பவர் வாக்களிக்க வந்தார். அப்போது அவரது வாக்கு ஏற்கெனவே பதிவாகி இருந்தது. இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் அவர் முறையிட்டார். ஆனால், அதை ஏற்காததால் பெரியசாமியும், உறவினர்கள் 19 பேரும் தேர்தலை புறக்கணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x