Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

சேடபட்டி அருகே வேன் மோதி தீப்பற்றிய லாரி - வாக்களிக்க வந்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு :

சேடபட்டி அருகே வேன் மோதியதில் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றியதால் உருக்குலைந்த லாரி. (வலது) விபத்தில் சேமடைந்த சரக்கு வேன். படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

மதுரை

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து கழிவு பேப்பர், அட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று நேற்று அதிகாலை பழநிக்கு புறப்பட்டது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வேலைக்குச் சென்ற ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சரக்கு வேனில் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை 5 மணியளவில் மதுரை மாவட்டம் சேடபட்டி - உசிலம்பட்டி சாலையில் பெட்ரோல் பங்க் அருகே பேப்பர் ஏற்றி வந்த லாரி மீது வேன் மோதியதில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றியது. மேலும், வேனின் முன்பகுதியும் நொறுங்கியது. இதில் வேனில் வந்த தொழிலாளர்களான முத்துப்பாண்டி, கருப்பையா, மருதலிங்கம் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த தமிழரசி, முத்து, சுந்தரமூர்த்தி, முத்துமாரி மற்றும் லாரி டிரைவர் பீர் முகமது உள்ளிட்டோர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து சேடபட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x