Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள - 8 சட்டப்பேரவை தொகுதிகளில் 78.55 சதவீத வாக்குப்பதிவு : முகக்கவசம் அணிந்து வாக்களித்த வாக்காளர்கள்

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் வாக்களிக்க காத்திருந்த சாதுக்கள். அடுத்த படம்: வந்தவாசி அடுத்த அருங்குணம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சமூக இடைவெளியின்றி வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதியில் … சதவீத வாக்குகள் பதிவானது.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20,77,440 வாக்காளர்கள் உள்ளனர். 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 122 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

15 இயந்திரங்கள் பழுது

கிளியாப்பட்டு உட்பட15-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. அவற்றை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சரி செய்யப்பட்டது. ஓரிரு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை வாக்குப்பதிவு தடைபட்டது.

முக்கிய பிரமுகர்கள் வாக்குப்பதிவு

திருவண்ணாமலை அடுத்த சே.கூடலூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனும், தி.மலை அடுத்த வேங்கிக்கால் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

சமூக இடைவெளி இல்லை

முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப் பட்டனர். வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்பட்டது. முன்னதாக, அவர்களது கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் சக்கர நாற்காலி மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அழைத்து வரப்பட்டனர். பெரும்பாலன வாக்குச்சாவடியில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. மருத்துவக் கழிவுகளை சேகரிக்க மஞ்சள் நிற தொட்டிகள் வைக்கப் பட்டன. ஆனால், அதில் கையுறை மற்றும் முகக் கவசங்களை போடாமல் வாக்காளர்கள் வீசி விட்டு சென்றனர்.

காலை 9 மணிக்கு 10.71 சதவீதம்

செங்கம் தொகுதியில் 7.04 சதவீதமும், திருவண்ணாமலை தொகுதியில் 10.65 சதவீதமும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 8 சதவீதமும், கலசப்பாக்கம் தொகுதியில் 10.88 சதவீதமும், போளூர் தொகுதியில் 14.97 சதவீதமும், ஆரணி தொகுதியில் 8.41 சதவீதமும், செய்யாறு தொகுதியில் 13.75 சதவீதமும், வந்தவாசி தொகுதியில் 12.71 சதவீதமும் என மொத்தம் 10.71 சதவீத வாக்குகள் பதிவானது.

11 மணிக்கு 22.77 சதவீதம்

செங்கம் தொகுதியில் 16.58 சதவீதமும், திருவண்ணாமலை தொகுதியில் 26.06 சதவீதமும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 16.37 சதவீதமும், கலசப்பாக்கம் தொகுதியில் 20.84 சதவீதமும், போளூர் தொகுதியில் 20.01 சதவீதமும், ஆரணி தொகுதியில் 24.13 சதவீதமும், செய்யாறு தொகுதியில் 29.60 சதவீதமும், வந்தவாசி தொகுதியில் 28.43 சதவீதமும் என மொத்தம் 22.77 சதவீத வாக்குகள் பதிவானது.

நண்பகல் 1 மணிக்கு 43.17 சதவீதம்

செங்கம் தொகுதியில் 42.38 சதவீதமும், திருவண்ணாமலை தொகுதியில் 47.47 சதவீதமும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 27.66 சதவீதமும், கலசப்பாக்கம் தொகுதியில் 35.86 சதவீதமும், போளூர் தொகுதியில் 46.49 சதவீதமும், ஆரணி தொகுதியில் 46.79 சதவீதமும், செய்யாறு தொகுதியில் 50.64 சதவீதமும், வந்தவாசி தொகுதியில் 47.06 சதவீதமும் என மொத்தம் 43.77 சதவீத வாக்குகள் பதிவானது.

3 மணிக்கு 60.52 சதவீதம்

செங்கம் தொகுதியில் 57 சதவீதமும், திருவண்ணாமலை தொகுதியில் 56.66 சதவீதமும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 58.36 சதவீதமும், கலசப்பாக்கம் தொகுதியில் 69.56 சதவீதமும், போளூர் தொகுதியில் 62.58 சதவீதமும், ஆரணி தொகுதியில் 57.73 சதவீதமும், செய்யாறு தொகுதியில் 64.72 சதவீதமும், வந்தவாசி தொகுதியில் 58.84 சதவீதமும் என மொத்தம் 60.52 சதவீத வாக்குகள் பதிவானது.

மாலை 5 மணிக்கு 70.91 சதவீதம்

செங்கம் தொகுதியில் 64.67 சதவீதமும், திருவண்ணாமலை தொகுதியில் 65.90 சதவீதமும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 67.66 சதவீதமும், கலசப்பாக்கம் தொகுதியில் 74.29 சதவீதமும், போளூர் தொகுதியில் 75.95 சதவீதமும், ஆரணி தொகுதியில் 72.83 சதவீதமும், செய்யாறு தொகுதியில் 76.63 சதவீதமும், வந்தவாசி தொகுதியில் 70.52 சதவீதமும் என மொத்தம் 70.91 சதவீத வாக்குகள் பதிவானது.

இரவு 7 மணிக்கு வாக்கு சதவீதம்

செங்கம் தொகுதியில் 80.67 சதவீதமும், திருவண்ணாமலை தொகுதியில் 71.77 சதவீதமும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 79.40 சதவீதமும், கலசப்பாக்கம் தொகுதியில் 79.69 சதவீதமும், போளூர் தொகுதியில் 79.38 சதவீதமும், ஆரணி தொகுதியில் 79.88 சதவீதமும், செய்யாறு தொகுதியில் 81.67 சதவீதமும், வந்தவாசி தொகுதியில் 76.47 சதவீதமும் என மொத்தம் 78.55 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்

வாக்குப் பதிவுகள் 7 மணியள வில் நிறைவு பெற்றதும், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்லப் பட்டது. வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று இரவு முதல் விடிய விடிய இன்று அதிகாலை வரை மின்னணு வாக்குப்பதிவுகள் கொண்டு செல்லப்பட்டன. அனைத்து இயந்திரங்களும் வந்து சேர்ந்ததும், அதனை அறையில் வைத்து கதவுகளை பூட்டி ‘சீல்' வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x