Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மொத்தம் 2673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
7 தொகுதிகளில் 132 வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2673 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 5,516 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,211 கட்டுப்பாட்டுக் கருவிகள், 3611 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவிகள் ஆகியவை ஒதுக்கப்பட்டு நேற்று அவற்றை பலத்த பாதுகாப்புடன் சம்பந் தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடந்தது.
இந்தப் பணியை தேர்தல் பார்வையாளர் பாபுசிங் ஜமோட், திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5,058 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,965 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,085 வாக்காளர் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் இயந்திரங்கள் என மொத்தம் 11,108 வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டன.
சிவகங்கை
காரைக்குடி தொகுதியில் உள்ள 443 வாக்குச்சாவடிகளுக்கு காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தும், திருப்பத்தூர் தொகுதியில் உள்ள 410 வாக்குச்சாவடிகளுக்கு திருப் பத்தூர் வட்டாட்சியர் அலு வலகத்தில் இருந்தும், மானா மதுரை (தனி) தொகுதியில் உள்ள 337 வாக்குச்சாவடிகளுக்கு மானாமதுரை வட்டாட்சியர் அலு வலகத்தில் இருந்தும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின் னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள், கரோனா தடுப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.Sign up to receive our newsletter in your inbox every day!